Get Best Only
பாகம் 29
அங்கே –
ரத்தனையும் மற்றவர்களையும் நடக்க வைத்து கூட்டிசென்றனர். சிறிது தூரத்தில் கூடாரம் ஒன்று இருப்பது தெரிந்தது. அங்கு ஒருவன் நின்றுகொண்டிருந்தான். இவர்கள் அருகில் சென்றனர். அங்கே ரம்பம், கயிறு, சிறிய அளவிலான அரிவாள் போன்றவை இருந்தன. இவர்கள் உள்ளே சென்று ஆளுக்கொன்றாய் எடுத்துக்கொண்டனர். எடுத்துக்கொண்டு வந்து வெளியே நின்றனர். ரத்தனும் ஒரு அரிவாளை கையில் எடுத்துக் கொண்டான். உடனே அங்கிருந்தவன் ரத்தனின் கையில் இருந்த அரிவாளை பிடுங்கினான். ரத்தனிடம்,
‘நீ புதுசுதான, உனக்கென்ன தெரியும். போய் ரம்பம் போடு, போ’ என்றான். ரத்தனோ ரம்பம் இல்லாமல் எப்படி ரம்பம் போடுவது என எண்ணினான். அப்போதுதான் பார்த்தான். அவர்கள் கையில் வைத்திருந்தது இருபக்கம் பிடி போட்ட ரம்பம். இருவர் பிடித்துதான் அறுக்க முடியும். திரும்பி அரிவாளை பிடுங்கியவனிடம்,’வர்றண்ணா’ என்று கூறிவிட்டு கூடாரத்தை விட்டு வெளியில் வந்து கூட்டத்தோடு கூட்டமாக நின்றான்.
அந்த மூவரில் ஒருவன் கூட்டத்தைப் பார்த்து மரங்களைச் சுட்டிக் காட்டியவாறே,
‘இந்த வரிசையில இருக்குற மரங்கள வழக்கம்போல அறுத்துப்போட்டு தூக்கிப் போகணும். மழை வர்ற மாதிரி இருக்கு. சீக்கிரம் வேலைய முடிங்க’ என்று அதட்டினான்.
கூட்டத்தினர் அனைவரும் தலையசத்தனர். அவன் “போங்கள்” என்பது போல் கையசைக்க, அனைவரும் வேகமாகச் சென்று, ஒரு மரத்துக்கு இரண்டு பேராக அமர்ந்து ரம்பம் போட்டு அறுக்க ஆரம்பித்தனர். ரத்தனும் இணைந்து கொண்டான். சென்று ஒருவரின் அருகில் அருகில் அமர அவரோ,
‘தம்பி, உன்னால ரம்பம் போட முடியாது. ரெண்டு, மூனு மரம் விழுந்த்ததும் கொடுவா வச்சி எதாச்சும் வெட்ற மாதிரி பண்ணிகிட்டு இரு. அதுவரைக்கும் சும்மா எங்க கூட உக்காந்துகிட்டு இரு’ என்றார். ரத்தனும் சரி என்றான். இருவர் ரம்பம் போட்டு மரத்தை அறுக்க ரத்தன் அந்த மூவரின் கண்ணில் படாதவாறு உட்கார்ந்து கொண்டு இவர்களுடன் பேசலானான். ‘அண்ணா’
அவரோ, ‘இரு, இது என்ன மரம்? இது என்ன இடம்? இவங்க யாரு? நாங்களாம் யாரு? இதான கேட்கப்போற?’
ரத்தன் ஆமாம் என்பதுபோல் தலையசைத்தான்.
‘இதுங்களாம் சந்தன மரங்க. சந்தனத்துல சோப்பு தயார் பண்றதுக்காக இதையெல்லாம் வெட்டி மூணு, நாலு துண்டாக்கி இங்கிருந்து தூக்கிப் போய், நம்மள அடச்சி வச்சிருக்காங்கல்ல அங்க போடுவோம். அங்க இருக்குற ஆளுங்க இதோட தோலை செதுக்கிட்டு மெஷின் வச்சி சோப்பு சைஸ்ல வெட்டி பெட்டில போட்டு கம்பெனிகளுக்கு அனுப்பிடுவாங்க’
‘சரிண்ணே! அதுக்கு எதுக்கு உங்கள.... இது, நம்மள புடிச்சி வந்து இப்படி அடிமை வேலை வாங்கணும்’
‘வேலைக்கு ஆள் வச்சா சம்பளம் குடுக்கணும். அது மட்டுமில்லாம இந்த காட்டுக்குள்ள எவன் வேலைக்கு வருவான். இப்படி கடத்தி வந்தா காசு மிச்சம் தான. களி மட்டும்தான் சாப்பாடு. எதிர்த்து ஒரு வார்த்த பேசக்கூடாது. மீறி பேசுனா குடும்பத்தோட எல்லாரும் பாக்குற மாதிரி கொன்னுபோடுவானுங்க. இங்கிருந்து தப்பிச்சி போய்ட்டா அவங்க பொண்டாட்டி, புள்ளைங்கள நம்ம கேட்டுக்கு முன்னாடி ஒரு கல் இருக்குல்ல, அதுல தலைய வைக்க சொல்லி மண்டைய ரெண்டா பொளந்துடுவானுங்க. இதுக்காகவே ஒருத்தன வளர்க்குறானுங்க. பாக்க மனுஷன் மாதிரியே இருப்பான். ராட்சஷன். அத கூட்டி வந்து, அது கையால அடிச்சி சாவடிப்பானுங்க. அதனால யாரும் இங்கிருந்து தப்பிச்சி போகணும்னு நெனைக்க மாட்டாங்க’
‘ஆனா தப்பிச்சி நெறைய பேர் வந்திருக்காங்க. ஆனா அவங்க எல்லாம் ஊர்ல பைத்தியமா திரியுறாங்க’
‘அவங்களாம் தப்பிச்சி போனவங்க இல்ல. இவனுங்க சித்ரவத பண்ணி ஊசி, மருந்துளாம் போட்டு சித்த பிரமை புடிக்க வச்சி ஊருக்கு பக்கத்துல கொண்டு போய் விட்ருவானுங்க. அவங்களா தனியா வந்து மாட்டிக்குறவனுங்க. இப்போ உனக்கு பணயம் அந்த பொண்ணு அந்த பொண்ணு. அந்த பொண்ணு இல்லனா உன்னையும் பைத்தியமாக்கி இருப்பானுங்க. நீ தப்பிச்சி போய்ட்டா அந்த பொண்ண கொன்னுடுவானுங்க. உன்னாலயும் இந்த காட்ட விட்டு தப்பிச்சி போக முடியாது. ஒண்ணு செத்துப்போவ, இல்ல மறுபடி இவனுங்க கிட்டயே மாட்டிக்குவ’
‘எதுக்கு எங்கள மாதிரி ஆளுங்கள பைத்தியமாக்கி அலைய விடணும்?’
‘இதுவும் ஒரு வகையான பயமுறுத்துற யுக்தி. அப்பதான் ஆராய்ச்சி பண்றேன்னு யாரு இந்த பக்கம் வரமாட்டாங்கனு இப்டி பண்றானுங்க. அந்த பேய் கதை மாதிரி. அந்தப் பேய்க்கு பயந்துதான் நாங்க இந்த ஊரவிட்டு கெளம்புனோம். ஆனா ஊர்ல இருந்து கெளம்புன கொஞ்ச தூரத்துலயே எங்கள கடத்தி இங்க கூட்டி வந்துட்டானுங்க. எங்க பொண்டாட்டி புள்ளைங்கள பாத்தே பத்து வருஷத்துக்கு மேல ஆகுது. அவங்களாம் உயிரோட இருக்காங்களானு கூட தெரியலப்பா’
‘கவலைப்படாதீங்கணா, அவங்களுக்கு ஒண்ணும் ஆயிருக்காது’
திரும்பி சாட்டி வைத்திருக்கும் அந்த மூவரையும் பார்த்து,
‘அவனுங்கதான் இந்த கூட்டத்துக்கு தலைவங்களா?’
‘ஆமாப்பா’
‘அந்த மூணு பூட்டு எதுக்கு? இவங்க மூணு பேரு மனசு வச்சாதான் இங்கிருந்து வெளில போக முடியுமா? அப்டினா அந்த இடத்தில் இருந்து வெளில போக அந்த ரெண்டு வழிதான் இருக்கா?’
‘நானும் அப்டிதான்னு நெனைக்கிறேன்’
http://www.angelsofkolkata.com/lake-town-escorts.htmlhttp://www.angelsofkolkata.com/kolkata-airport-escorts.htmlhttp://www.angelsofkolkata.com/howrah-escorts.htmlhttp://www.angelsofkolkata.com/kolkata-call-girls-number.html
u dont even know tamil
http://www.angelsofkolkata.com/lake-town-escorts.html
ReplyDeletehttp://www.angelsofkolkata.com/kolkata-airport-escorts.html
http://www.angelsofkolkata.com/howrah-escorts.html
http://www.angelsofkolkata.com/kolkata-call-girls-number.html
u dont even know tamil
ReplyDelete