Get Best Only
பாகம் 28
இரண்டு ஊர் மக்களும் இருந்தனர். மலைக்குடி மக்கள் ஒருபுறமும், இந்த ஊர் மக்கள் ஒருபுறமும் இருந்தனர். பூசாரி சாமிக்கு தீப ஆராதனை காண்பித்துக் கொண்டிருந்தார். இந்த ஊர்ப் பெரியவர், மலைக்குடி மக்களின் பக்கமே பார்த்துக்கொண்டிருந்தனர். இந்த ஊருக்கு இவர் எப்படியோ அந்த ஊர் மக்களுக்கும் தலைவர் ஒருவர் இருந்தார். அவரைக் காணவில்லை. எந்த ஒரு விசேஷம், விழா என்றாலும் அவர்தான் முன்நிற்பார். அவர் தென்படவில்லை. ஊர்ப்பெரியவருக்கு குழப்பம். அந்தக் கூட்ட்த்தில் நின்றிருந்த ஒருத்தனை கண்ஜாடையாக கூட்ட்த்திற்கு வெளியே கூப்பிட்டான். அவன் யார் கண்ணிலும் படாமல் கூட்ட்த்தின் பின்பக்கமாக வந்தான். இவரும் கூட்ட்த்தின் ஊடே பின்பக்கமாக வந்தார். அவனை இவர் பக்கமாக இழுத்தார்.
அவனிடம், ’உங்க ஊர்ப்பெரியவர் எங்க? எங்கடா? ம், என்னதான் ஊர்ப்பகை ஆகியிருந்தாலும் சாமி விசேஷத்துக்கு வரக்கூடாதா? ஊரே வந்திருக்கு. அவருக்கு என்ன அவ்ளோ கோவம்?’
அவனோ பணிவாக, ’அய்யா, அவர் வரமுடியாது. அவர் செத்துட்டாரு’
இவருக்கு பகீர் என்றது.
அவன் தொடர்ந்தான்.
‘உங்க ஊர் வெளில இருக்குற மரத்துல ஒரு பொணம் தொங்கிச்சி இல்ல, அது அவரோட பொணம்தான்’
அவருக்கு மேலும் அதிர்ச்சி.
‘அய்யா, பண்ண பாவம் சும்மா விடுமா, அந்த பொண்ணும் பையனும்தான்....’
அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே மலைக்குடி மக்கள் கூட்டத்தில் இருந்த ஒருத்தன்; இறந்துபோன மலைக்குடி மக்கள் தலைவரின் மகன்; இவனைப் பார்த்துவிட்டான்.
‘டேய்! வாடா இங்க, அங்க என்னடா பேச்சு?’ என்று அதட்டிக் கூப்பிட்டான். அவன் பயந்தவாறே சென்றுவிட்டான். பெரியவர் அப்படியே உறைந்துபோய் நின்றார். அந்த மலைக்குடி மக்களின் பூசாரி ஊர்ப்பெரியவரின் பின்பக்கத்திலிருந்து அவர் தோளில் கை வைத்தார். திடிக்கிட்டுத் திருபினார். அந்தப் பூசாரி,
‘அய்யா, சாமி சிலைய உடைச்சது யாருனு உங்களுக்கு தெரிஞ்சதா?’
‘இல்ல’
‘தெரியணுமா?’
‘ஆமா’
‘உங்க ஊர்ப் பூசாரி அதப் பத்தி உங்க கிட்ட எதாவது சொன்னாரா?’
‘இல்லயே’
‘அப்போ அவர் எதோ ஒரு சக்தியால கட்டுப்படுத்தப் பட்டிருக்கார். அது நல்லதாவும் இருக்கலாம், கெட்டதாவும் இருக்கலாம். இது என்னிக்கு நடந்துச்சு’
‘பவுர்ணமிக்கு மூணு நாள் முன்னாடி’
‘நாள் யார் காரணம்கிறத சொல்ல முடியாது. இது நடந்த அன்னிக்கு என்ன நாள்னு மனசுல வச்சுங்குங்க. அதோட இத்தன நாள் சாமிக்கு அலங்காரம் பண்ணின ரெண்டு பேரோட சேர்த்து முடிச்சி போட்டுப் பாருங்க, பதில் உங்களுக்கே கெடைக்கும்’
கூறிவிட்டு அவர் அவர்களது ஊர்க்காரர்களுடன் சென்று நின்றுகொண்டார். பெரியவர் அவர் சொன்னது விளங்காமல், விளக்கத்தை தேடிக் கொண்டிருக்க பதில் கிடைத்தது. அதிர்ந்தார். அந்தப் பூசாரியைப் பார்க்க அவர் அம்மனை கைகூப்பி வணங்கிக் கொண்டிருந்தார்.
No comments:
Post a Comment