Get Best Only
பாகம் 27
ரத்தன் ஒன்றுமறியாமல் முழித்தான். “என்னது மரம் அறுக்கணுமா? என்ன மரம் அறுக்கணும்? இதென்ன கொத்தடிமை வச்சி வேலை வாங்குற இடமா?” என்று யோசித்துக்கொண்டே இவர் கூறியதுபோல் ஆகிவிட்டால் என்ன செய்வது, முதலில் சாப்பிடுவோம்; பிறகு யோசித்துக்கொள்வோம் என்று அந்தக் கூடையிலிருந்து ஒரு களி உருண்டையை எடுத்து திரும்பி உட்கார்ந்தான். கொஞ்சம் கொஞ்சமாக பிட்டு மெதுவாக அதை சாப்பிட முயற்சி செய்து கொண்டிருந்தான். சிறிது சிறிதாக சாப்பிட்டு அவன் முழுவதையும் சாப்பிட்டு முடித்திருந்தான். சாப்பிட்டு முடித்து திரும்பி பார்த்தபோது இரண்டு கூடைகளுமே காலியாக இருந்தது.
படிக்கட்டில் அமர்ந்திருந்தவன் எழுந்து வந்து கூட்டத்தை விலக்கி இரண்டு கூடைகளையும் எடுத்துச் சென்று அந்தக் கேட்டின் ஓரம் வைத்தான். இவர்களுக்கு இடதுபக்கத்தில் ஒரு சிறிய கேட்டின் பின் இருவர் சிலர் வந்து நின்றனர். ஒரு ஆறேழு பேர் இருக்கலாம். அதில் ஒருவன் அந்தக் கேட்டில் இருந்த ஒரு பூட்டினை திறந்தான். இன்னொருவன் அவனிடம் இருந்த சாவியை வைத்து அதற்கு கீழ் இருந்த பூட்டினைத் திறந்தான். இன்னொருவனும் அதேபோல் அவன் வைத்திருந்த சாவியை வைத்து அடுத்த பூட்டைத் திறந்தான். கதவு திறந்தது. உள்ளே இருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்றனர். வெளியே இருந்த ஒருவன் உள்ளே நுழைந்து வாசலின் உள்புறம் நின்றான். அவன் கையில் ஒரு சாட்டை; பலம் வாய்ந்த சாட்டையாக தெரிந்தது; பெல்ட்டின் இடப்பக்கத்தில் நீளமான கத்தி ஒரு உறைக்குள் இருந்தது. அவன் உள்ளே வந்து நின்றதும், உள்ளே இருந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக அந்தக் கேட்டின் வழியே வெளியேறினர். ரத்தனும் அவர்களுடன் வெளியேறினான். வெளியே செல்பவர்களை ஒருவன் எண்ணிக் கொண்டிருந்தான். அனைவரும் வெளியே வந்து நின்று கொண்டிருந்தனர். மறுபடி அந்த மூன்று பூட்டுகளும் பூட்டப்பட்டன. பூட்டிவிட்டு இடதுபக்கம் திரும்பி முன்னே சென்றனர். அவர்கள் உடன் இருந்த மற்ற நால்வரும் பார்ப்பதற்கு சாதாரணமாகவே தெரிந்தனர். அனைவரும் அந்த மூவரையும் பிந்தொடர்ந்தனர். அந்த நால்வரும் அனைவரையும் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தனர்.
வினய் மிக மெதுவாக நடந்த அவன் கூறியிருந்த அந்த வெள்ளைக் கற்கள் நிறைந்த மலையை நெருங்கியிருந்தான். அவனுக்கு தாகமாக இருந்தது. அப்படியே நடந்து சென்றவனின் கண்ணில் ஒரு சிறிய குளம் போன்று கண்ணில் பட்டது. தண்ணீர் புதியதாக இருந்தது. புதிதாக பெய்த மழையில் மலையில் இறங்கி இங்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். அந்தக்க் குளத்தின் அருகில் சென்று அமர்ந்தான். இரு கைகளாலும் நீரை அள்ளிப் பருகினான். மிகவும் சுத்தமான நீர். அள்ளி அள்ளிப் பருகினான். தாகம் தணிந்தது. நீரை நன்றாகப் பார்த்தான். நீரின் அடிப்பகுதியில் இருந்த கற்கள் கூட மிகத்தெளிவாகத் தெரிந்தது. பளிங்குபோல் இருந்தது. எழுந்தான். அந்த ஆள் கூறியது போலவே மலையின் இடப்பக்கம் செல்லவும் வழி இருந்தது. அந்தப் பாதையிலேயே நடந்தான். மலையைச் சுற்றி வந்த அந்தப் பாதை இடப்பக்கமாக திரும்பியது. ஒரே நேரான பாதை. வினய் நடக்க ஆரம்பித்தான்.
அம்மனுக்கு கூழ் படைப்பதற்காக இரண்டு ஊர் மக்களும் கூடியிருந்தனர். கோயிலின் முன்பு கொப்பரைகள் முழுவதும் கூழ் வைக்கப்பட்டிருந்த்து. மூன்று பக்கமும் இருந்த தெருக்களில் மக்கள் கூடியிருந்தனர். இரண்டு ஊர் மக்களும் இருந்தனர். மலைக்குடி மக்கள் ஒருபுறமும், இந்த ஊர் மக்கள் ஒருபுறமும் இருந்தனர். பூசாரி சாமிக்கு தீப ஆராதனை காண்பித்துக் கொண்டிருந்தார்.
No comments:
Post a Comment