Get Best Only
பாகம் 25
இரும்பு கேட்டை இரு கைகளாலும் பிடித்தவாறு நடந்தவற்றை ரத்தன் பார்த்துக் கொண்டிருந்தான். ஒன்று புரியவில்லை.
சுற்றி இருந்தவர்களைப் பார்த்து,
‘என்ன இடங்க இது? நீங்களாம் யாரு? அவனுங்களாம் யாரு? இங்க என்ன நடக்குது? அவள எங்க கூட்டிப் போறாங்க?’
சற்று தூரமாக அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர் எழுந்து ரத்தனை நோக்கி நடந்து வந்தார். ரத்தனைப் பார்த்து,
‘தம்பி, நீ கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிஞ்சிகிட்டு என்ன பண்ணப்போற? இங்கதான இருக்கப் போற; போக போக தெரிஞ்சுப்ப’
‘இங்கயா? இவனுங்க கிட்டயா? என் ஃப்ரெண்ட்ஸ் வந்துகிட்டு இருக்கானுங்க. எப்படியும் நம்ம எல்லாரையும் காப்பாத்திடுவாங்க’
சுற்றி இருந்தவர்கள் சிரித்தனர்.
‘அவனுங்க இன்னும் உயிரோட இருப்பானுங்கனு நினைக்கிறியா?'
சொல்லிவிட்டு அந்தப் பெரியவர் பழையபடி அவர் இடத்தில் சென்று அமர்ந்துகொண்டார். ரத்தன் நம்பிக்கை வீண்போய்விடுமோ என்று அச்சப்பட்டான். ரேஷ்மாவை கூட்டிப்போன அந்த கேட்டையே பார்த்துக்கொண்டு சிலைபோல அமர்ந்திருந்தான்.
அந்தப்பெண் முன்செல்ல ரேஷ்மா பின்னே சென்றாள். அந்த இடம் பார்க்க ஏதோ பேக்டரி போல இருந்தது. அங்கே சின்ன சின்னதாய் நிறைய இயந்திரங்கள் அறையைச் சுற்றிலும் இருந்தது. ஏதோ வாசனை மூக்கை அடைத்தது. மிகவும் அதிகப்படியான வாசனை அறை முழுவதும் நிரம்பியிருந்தது. ஒவ்வொரு இயந்திரத்திற்கும் இரண்டு பெண்கள் சகிதம் அமர்ந்திருந்தனர். ஆண்கள் இல்லை. ஒவ்வொரு இயந்திரத்திற்கும் முன்னால் சுவற்றில் கட்டமாக ஓட்டை போடப்பட்டிருந்தது. அந்த கூட்டத்தில் இருந்த பெண்கள் ரேஷ்மாவையே பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தப் பெண் ரேஷ்மாவை அழைத்துக்கொண்டுபோய் கழிவறை பக்கம் நிறுத்தினாள்.
ரேஷ்மாவைப் பார்த்து.’தே, ஏதாவது போறதுனா போய்ட்டு, குளிக்குறதுனா ரெண்டு சொம்பு மொண்டு ஊத்திக்கினு, அங்க எதுனா துணி இருந்ததுனா எடுத்துப்போட்டுக்க; இல்ல இதயே போடறதுனா போட்டுக்குனு சீக்கிரம் வா, போ போ சீக்கிரம் போய்ட்டு வா!’ என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள்.
No comments:
Post a Comment