Get Best Only
பாகம் 14
அனைவரும் ஊர்ப்பெரியவரின் பக்கம் திரும்பினர்.
‘என்னங்கய்யா, இப்டி சொல்லிட்டுப் போறாரு?’
‘இவரு மட்டுமில்ல, இந்த ஊர்ல இருக்குற எல்லாரும் இதேதான் சொல்வாங்க. நான் வேணும்னா நோகாம நோன்பு திங்கற மாதிரி ஒரு ஐடியா சொல்ல்வா?’
‘என்னது?’
அதாவது இப்போ நீங்க வந்த மாதிரி, இதுக்கு முன்னாடி வந்த பத்திரிக்கைகாரங்க பேட்டி எடுத்து பேப்பர்ல போட்டிருப்பாங்க இல்ல, அத EDIT பண்ணி COPY பண்ணி உங்க பத்திரிக்கைல PASTE பண்ணிடுங்க. உங்களுக்கு செலவு மிச்சம். ரெண்டு நாள் ஊர சுத்திப்பாதுட்டு கெளம்புங்க’
அவர் பேசப்பேச இவர்களுக்கு சுர்ரென்றது.
‘இதுக்கு ஏம்ப்பா CHORUS-ஆ முறைக்கிறீங்க? இந்த ஐடியா பிடிக்கலனா, வேற ஐடியா தர்றேன்’
வினய் குறுக்கிட்டு,’ ஐயா நான் ஒரு ஐடியா தரவா?’
‘என்னதுப்பா?’
‘இப்போ நீங்க எங்கள உங்க ஊர் ஆளுங்ககிட்ட கூட்டிட்டு போங்க. இதுவரைக்கும் உங்க போட்டோ எந்த பத்திரிக்கைலயாவது வந்திருக்கா?’
‘இல்லயேப்பா’
‘நம்ம பத்திரிக்கைல உங்க போட்டோதான் ஓப்பனிங்கே. ‘பேய்களின் கூடாரத்தில் பெருந்தலைவர்’னு போட்ருவோம். ஸ்டில்ஸ்ஸு நைட் 12 மணிக்கு நடுக்காட்ல நிக்க வச்சி நச்சுனு எடுத்துடுவோம்’
‘நடுராத்திரில’
‘ம்’
‘நடுக்காட்ல?’
‘ஆமாம்’
‘உங்க பத்திரிக்கைல போட்டோ வரவைப்பனு பாத்தா கருமாதிப் பத்திரிக்கைல போட்டோ வரவச்சிடுவ போலிருக்கே. நீ போட்டோவே போட வேணாம். ஊர் ஜனங்கள வேணும்னா எடுத்துக்க. என் போட்டோ எனக்கு தெரியாம கூட எடுத்துறாத’
அனைவரும் சிரித்தனர்.
ஊர்ப்பெரியவர் முன்செல்ல நால்வரும் பின்தொடர்ந்து சென்றனர்.
சுனில்,’ சார், எங்க போய்க்கிட்டு இருக்கோம்?’
‘தம்பி, நாளைக்கு எங்க ஊர்ல கூழ் ஊத்துறது. அதுக்காக கோயில் நெலத்துல வெளஞ்ச கம்பு, கேப்பை, நெல்லு எல்லாத்தையும் ஊர் ஆளுங்க அறுவடை பண்ணி கூழாக்கி படைப்போம். அறுவடை முடிஞ்சிடிச்சி. இப்போ பதரு அடிக்கிறாங்க. ஊர்க்கள்த்துல, அங்கதான் போய்க்கிட்டு இருக்கோம்’
ரத்தன்,’ நல்லா GRAND-ஆ இருக்குமா?’
‘அவ்ளோ GRAND-ஆனு சொல்ல முடியாது. பக்கத்து ஊர் ஜனங்களும் வருவாங்க. அவங்க ஊர்லயும் இப்போ பதரு அடிக்கிற வேல நடந்துகிட்டு இருக்கு. அவங்க ஊர்ல இருந்து நாளைக்கு கேப்பக்கூழு, கம்புக்கூழு, சோளக்கூழு எல்லாம் வரும். வருஷா வருஷம் காப்பு கட்டுவோம். இந்த வருஷம்தான் சாமி சிலை உடஞ்சி போனதால அந்த மாதிரி எந்த சம்பிரதாயமும் பண்ண முடியல. சாமிசிலைய பாதியா வச்சிகிட்டு கூழ் ஊத்தி கும்பிடக்கூடாது. நாளைக்கு என்ன நடக்கப்போகுதோ தெரியல’
சுனில்,’என்ன சார், இங்கிலீஷ்-லாம் பேசறீங்க, உலக அறிவு இருக்கு. ஆனாலும் சாமி, பேய், பூதம்னு பேசிக்கிட்டு இருக்கீங்க?’
பெரியவர் சுனிலை முறைத்தார்.
‘தம்பி, இப்டி நீங்க பேசுவீங்கனு நான் எதிர்பார்க்கல. படிச்சவன் பண்பா இருப்பனு நெனச்சேன். எங்க நம்பிக்கைய கொச்சப்படுத்திட்டியே’
‘சாரி சார், கொஞ்சம் யோசிக்காம பேசிட்டேன்’
‘இந்த இங்கிலீஷு, நாகரிகம் எல்லாம் இப்போ வந்தது. ஆனா சாஸ்திர, சம்பிரதாயம் எல்லாம் நாம துணி போட்டு உடம்ப மறச்சிகிட்டு, ஒருத்தனுக்கு ஒருத்தியா வாழணும்னு சொன்ன முன்னோர்கள், வாழ்ந்த தெய்வங்கள் சொல்லிட்டுப்போனது. அவங்களத்தான் நாம சிலையா வச்சி இப்போ கும்புட்றோம். நாட்ல இருக்குற தலைவர்கள் சிலையும் அப்படித்தான். அவங்களாம் நம்ம தெய்வங்கள். சாஸ்திர, சம்பிரதாயங்கள் நாம போட்டிருக்கிற டிரெஸ் மாதிரி. நாகரிகம் வளந்துபோச்சுனு அவுத்து போட்டுட்டு திரியலாமா? இது உண்மை. நாளைக்கு நடக்கப்போற திருவிழால நீங்களே தெரிஞ்சிப்பீங்க’
வினய்,’ தப்பா எதாவது நடக்கும்னு தெரிஞ்சே எதுக்கு விழா நடத்துறீங்க?’
‘இல்லப்பா, தப்பா எதுவும் நடந்துடக்கூடாதுனு தான் நான் சொல்றேன். இந்த திருவிழா நடந்தாதான் அம்மா கோவமா இருக்காளா, இல்ல இன்னும் எங்க மேல கருணையோடதான் இருக்காளானு தெரின்ஞ்சிக்க முடியும்’
‘சாமி சிலைய சரி பண்ணாம ஏன் அப்டியே விட்டு வச்சிருக்கீங்க?’
‘அந்த காரியத்த யார் பண்ணா’ எதுக்காக பண்ணானு தெரியாம எந்தப் பரிகாரமும் பண்ண முடியாது. அதுவும் நாளைக்கு தெரிய வரலாம்’
பேசிக்கொண்டே பதறடிக்கும் இடத்தை அடைந்தனர். ஊரில் இருப்பவர்கள் ஒன்று கூடி ஆண்கள் பதறடித்துக்கொண்டும், பெண்கள் நெல் தூற்றிக்கொண்டும் இருந்தனர். குலவைப் பாட்டு காற்றில் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது. பதறடிக்கும் சத்தத்திற்கு ஏற்றவாறு பாட்டு அமைந்திருந்தது.
மதிய உணவு சாப்பிட்டுவிட்டு அனைவரும் அமர்ந்திருந்தனர். வினய் கூட்டத்தில் ஒருவரிடம் பேட்டியெடுக்க ஆரம்பித்தான்.
வினய்,’ சார், உங்க ஊர்ல இரவு நேரங்கள்ல இங்க இருக்குற காட்ல பேய் நடமாட்றதா சொல்றாங்களே அது உண்மையா? நீங்க எப்பவாவது பார்த்திருக்கீங்களா?’
அவர்,’ இந்த ஊர்ல இருக்குற எல்லாருமே பார்த்திருக்காங்க. அந்த ஆத்து வழியில நடந்து போகும். யாராவது அதுக்கு தொல்ல குடுக்குற மாதிரி நடந்துகிட்டா அவ்ளோதான். அவங்கள இழ்த்துட்டு போய் கொன்னு போட்டுடும். இல்லனா பித்து புடிக்க வச்சிடும்.ரொம்ப மோசமான பேய். நாங்க நெறய மந்திரவாதிங்கள கூட கூட்டிகிட்டு வந்து பேய விரட்றதுக்கு பாத்தோம். அவங்களயே அடிச்சி தொரத்தி விட்டுடிச்சி. அவ்வளவு ஏன் இந்த சாமி சிலைய உடச்சது கூட அதுதான். ரெண்டு வாரத்துக்கு முன்னாடி கூட பக்கத்து ஊர்க்காரன் ஒருத்தன மரத்து உச்சி கிளையில அடிச்சி சொறுகி வச்சிடுச்சி. பொணம் கூட இன்னும் அந்த மரத்துலயேதான் கெடக்கு. நீங்க கூட தம்பி, பேட்டி எடுக்கரதோட நிறுத்திக்குங்க. அந்த பேயப் ப்த்தி ஆராய்ச்சி பண்றேன்னு கெளம்புனா சாவுதான்’
‘சரி, சாமி சிலைய உடச்சிடிச்சினு சொன்னிங்களே அவ்வளவு சக்தி வாய்ந்த அம்மனோட சிலைய எப்டி ஒரு கெட்ட ஆத்மாவால உடைக்க முடியும். கிட்ட கூட நெருங்க முடியாதே’
‘தம்பி, இந்த ஊர்ல இருக்குற ஜனங்களுக்கு மட்டுமில்ல, நிறைய ஊர்ல இருக்குற ஜனங்களுக்கும் தெரியும் இந்த அம்மனோட மகிமை. இந்த சிலைய மனுஷங்க யாரும் உடைச்சிருக்க முடியாது. இது அந்த பேயோட வேலைதான்’
‘சரி, அந்த ஆவி, அது யாரோட ஆவி, உங்க ஊர்க்காரங்களா? இல்ல வேற யாராவதா?’
‘அத தெரிஞ்சிக்கதான் மந்திரவாதிகள கூட்டிகிட்டு வந்தாரு ஊர்த்தலைவரு. ஆனா தெரிஞ்சிக்க முடியல. அது அவங்களோட கட்டுக்கு அடங்கள. வரவும் இல்ல. அவங்களுக்கே குழப்பம். சரின்னு ராத்திரி 12 மணிக்கு அதோட வழியில போயி அத கட்டுப்போடலாம்னு போனப்பதான் மரண அடி அடிச்சி தொரத்தி விட்டுடிச்சி’
திரும்பி ஊர்ப்பெரியவரிடம்,’அய்யா இந்த சம்பத்துக்கு அப்புறம் அந்தப் பேய கட்டுப்படுத்தவோ, சாந்திப்படுத்தவோ நீங்க எதுவும் முயற்சி எடுக்கலயா?’
‘நாங்களும், அதாவது முன்னாடி ஊர்த்தலைவரா இருந்தவரு, நிறைய பூசாரிங்க, மந்திரவாதிங்க கிட்ட பேசினாரு. நானும் கூட போயிருந்தேன். ஆனா இந்தப் பேயப் பத்தி கேள்விப்பட்டு யாருமே எங்களுக்கு உதவி பண்ண வரல’
‘காவல்துறையில புகார் பண்ணீங்களா?’
ஊர்மக்கள் அனைவரும் சிரித்தனர்.
‘தம்பி, காவல்துறைல கம்ப்ளெயின்ட் பண்ணி அவங்க என்ன பண்ணப்போறாங்க? பேய டுமீல், டுமீல்னு சுடுவாங்களா?’
‘உங்களுக்கு பாதுகாப்பு குடுப்பாங்கள்ல’
‘இந்த விஷயத்துல நாங்கதான் அவங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணும். இதோ உங்களுக்கு கொடுக்குற மாதிரி. ம்... எத்தன பேர தூக்கிட்டு போச்சி; எத்தன பேர கொன்னு போட்டுச்சி. ஆனா ஒரு விஷயம் நல்லா புரிஞ்சிடுச்சி. அதோட வழியில நாம போகாத வரைக்கும் அதுக்கு தொந்தரவு குடுக்காத வரைக்கும் நமக்கு பிரச்சன இல்ல. சரி , பேட்டிய இதோட முடிச்சிக்கிறியா? மீதிய இன்னிக்கு சாமிப்படையல்ல அம்மாவே சொல்லுவா, என்ன?’
‘சரிங்கய்யா’
‘சரி, வாங்க வீட்டுக்கு போகலாம்’