Get Best Only
பாகம் 8
இன்ஸ்பெக்டர் வெளியில் சென்றிருப்பதால் ஒரு மணி நேரம் கழித்துவருமாறு வெளியில் நின்றிருந்த கான்ஸ்டபிள் சொல்லியனுப்பினார். மாலை 4 மணிக்கு மேல் ஆனாதால் சாப்பிட பக்கத்திலிருந்த ஓட்டலுக்குச் சென்றனர். உள்ளே சென்று அமர்ந்தனர்.
ரேஷ்மா, ’சீக்கிரம் எதாவது ஆர்டர் பண்ணுங்க.என்னால பசி தாங்க முடியல’ என்றாள். அனைவருக்கும் சாப்பாடு ஆர்டர் செய்தான் வினய். பத்து நிமிட்த்திற்கு பிறகு சாப்பாடு வந்தது. ஆர்டர் கொண்டுவந்தவனைப் பார்த்தாலே சாப்பிட சகிக்காது போலிருந்தது. குளிப்பது என்றால் என்னவென்றே தெரியாதவன் போலிருந்தான். திருட்டுமுழி கண்கள். பைத்தியம்போல் காட்சியளித்தான். சுத்தமாக ஒப்பவில்லை. சுனில் சிறிது கடுப்பாகி ஓனரை கூப்பிட்டான்.
‘ஏங்க! உங்களுக்கு வேற ஆளே கிடக்ககலையா? பைத்தியக்காரனையெல்லாம் வேலைக்கு வச்சிருக்கீங்க. குளிப்பாட்டி நீட்டா வச்சிருக்கலாம்ல’
‘மன்னிச்சுங்க ஸார்! உங்களுக்கு வேண்டியத நானே பக்கத்துல நின்னு கவனிக்கிறேன்’ என்றார் ஓனர். சப்ளையரிடம் திரும்பி ‘நீ போ’ என்றார். அவனும் தலைகுனிந்து அப்படியே நடந்து சென்று ஒரு இடத்தில் நின்றுகொண்டு மேலும் கீழுமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
வினய், ’ஏன் ஸார் இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் வேலைக்கு வச்சிருங்கீங்க. பாத்தா ஒரு மாதிரியா இருக்கான்’
‘ஸார், அவரும் உங்கள மாதிரி இங்க வந்தவர்தான் ஸார். ஆனா மூணுநாள் கழிச்சி இப்டி ஆகிட்டாரு’
‘நீங்க சொல்றது புரியல ஸார். என்ன ஆச்சு?’
‘அவர் சொந்த ஊர் டெல்லி பக்கம். இங்க வந்து சாப்டுட்டு பரதன் தாங்கல் கிராமத்துக்குப் போய் பேய பத்தி ஆராய்ச்சி பண்ணப் போறதா சொல்லிட்டு போனாரு. ஆனா மூணு நாள்ல இப்டி ஆகி வந்துட்டாரு’
அவர் சொன்னதும் நால்வருக்கும் பசிமயக்கம் போய் பயமயக்கம் வந்தது.
வினய், ’அவர் யாரு,என்னனு எந்த விவரமும் தெரியலயா?’
‘அவருக்கு சுத்தமா எதுவுமே ஞாபகத்துல இல்ல’
ரேஷ்மா, ’போலிஸ்ல சொல்லலியா?’
‘சொல்லல, சொன்னாலும் பெருசா எந்த action-ம் எடுக்க மாட்டாங்க. அந்த ஊரப்பத்தி எல்லாருக்குமே தெரியும். அந்த ஊருக்கு ஆராய்ச்சிக்குப் போனவங்க நெறய பேரு இப்டி ஆகி இருக்காங்க'
‘ ‘
அவர் சொல்ல சொல்ல அனைவர் முகத்திலும் பயம் பரவியது.
சொல்லிவிட்டு அவர் இருக்கையில் சென்று அமர்ந்தார் ஓனர். நால்வரும் அந்த ஊரைப் பற்றிய எண்ணத்தில் மூழ்கிப் போயினர்.
சுனில், ’வினய், என்ன இப்டி சொல்லிட்டுப் போறாரு. இதப் பத்தி எடிட்டர் எதுவுமே சொல்லலியே?’
‘ அந்த ஊர்ல இருக்குறவங்களோட கட்டுப்பாட்ட மீறாத வரைக்கும் நமக்கு ஒண்ணும் நடக்காது. அதுமட்டுமில்லாம நாம ஆராய்ச்சிக்குப் போகல. அந்த ஊர் மக்கள பேட்டி எடுக்கப்போறோம். அவ்ளோதான். என்ன ஆனாலும் இத நாம முடிக்கணும். நம்மளோட first project நல்லபடியா முடியணும்’
சாப்பிட்டு முடித்து ஹோட்டலைவிட்டு வெளியேறினர். போலிஸ் ஸ்டேஷனுக்கு செல்லும் வழியில
ரத்தன், ’வினய், எடிட்டர்கிட்ட சொல்லி இந்த ப்ரொஜக்ட கேன்சல் பண்ண சொல்லிட்டு வேற ப்ரொஜக்ட் நாமே ரெடி பண்ணா என்ன?’
‘பேய்ய விட நல்ல ப்ரொஜக்ட்னா செக்ஸ் தான். நீ நடிக்கிறியா? ஹீரோயின் தேடலாமா?’
ரேஷ்மா, ’நான் ஒருத்தி இங்க இருக்கேன்டா, ஞாபகம் இருக்கா இல்லியா?’
சுனில், ’ஆமால்ல, நீங்க மட்டும் ஹீரோயின் தேடறீங்களே, இவளுக்கு ஒரு ஹீரோ தேடணும்னு தோணலியா உங்களுக்கு?’
ரேஷ்மா,’ ஹேய், நான் அந்த அர்த்தத்துலயா சொன்னேன்’ என்றவள் சுனிலை அடிக்கப் போக, அடி விழுந்தது, வினய்யின் வயிற்றில்.
‘எப்பா.. ஏழை வயித்துல அடிச்சிட்டாடா..’