Get Best Only
பாகம் 7
வினய்யும், சுனிலும் எடிட்டர் கேபினுக்குள்ளிருந்து வெளியில் வந்தனர். நேராக store-க்குள் சென்று தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேறினர். வினய் டிக்கட்டில் புறப்படும் நேரத்தைப் பார்த்தான். பத்து மணி என போட்டிருந்தது.
வினய்யும் , சுனிலும் தத்தம் வண்டிகளை எடுத்துக்கொண்டனர். ரத்தன், சுனில் பைக்கிலும், ரேஷ்மா, வினய் பைக்கிலும் ஏறிக்கொண்டனர். கோயம்பேட்டிற்கு விரைந்தனர்.
கோயம்பேடு டூ வீலர் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு பஸ் ஸ்டாண்டிற்குள் நுழைந்தனர். இவர்கள் ஏறவேண்டிய வண்டியை தேடிக் கண்டுபிடித்தனர். ஏறி அமர்ந்தனர்.
ரத்தன் வைத்திருந்த பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து ரேஷ்மாவும், வினய்யும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். சுனிலுக்கு நீட்ட அவனோ வேண்டாம் என்றான். மணி பத்தை நெருங்கிக்கொண்டிருக்க டிரைவரும் கண்டக்டரும் பஸ்ஸில் ஏறினர். பஸ் புறப்பட்டது.
ரேஷ்மா வினய்யிடம்,’வினய், இவ்ளோ sensitive-ஆன விஷயத்த கவர் பண்ண .நம்மள அனுப்ப காரணம் என்ன? நம்ம மேல இருக்குற நம்பிக்கையா? இல்ல சோதனையா?’
‘confirm-ஆ சோதனைதான். இத நாம perfect-ஆ முடிச்சாதான் நாம great team’
‘முடிச்சிடலாம். ஓகே, நாம போற ஊர்ல நமக்கு பாதுகாப்பு எப்படி?’
‘ஒண்ணுமில்ல, போலிஸ் ஸ்டேஷனே அங்கிருந்து 10 கிலோமீட்டர் தள்ளிதான் இருக்கு. நாமதான் நம்மள பாத்துக்கணும்’
ரேஷ்மா பெருமூச்சு விட்டாள். அமைதி படர்ந்தது.
பரதன் தாங்கல் கிராமம். மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது. வீடுகள் இடியும் நிலையில் அன்றோ இன்றோ என்றிருந்த்து. ஒரு சில வீடுகள் பிரித்து கட்டி புதிதுபோல காட்சியளித்த்து.மொத்தம் மூன்று தெருக்களும், ஒரு முக்கூட்டும் இருந்தது.முக்கூட்டில் ஒரு கோயில். மாரியம்மன் கோயில்.கிழக்கு நோக்கி இருந்த்து.
வீட்டுக்கு வீடு வாசலில் வேப்பமரமோ, அரசமரமோ இருந்தது. பார்க்கவே வினோதமாக காட்சியளித்தது. ஊருக்கு வெளியே ஊர்க்காவல் சாமி கோயில் பாழடைந்து கிடந்தது. காலையில் எழுந்து வேலைக்குச் செல்கிறார்கள். மழைபெய்து நன்கு விளைச்சல் இருந்தாலும், பெரும்பாலும் விவசாயத்தை விரும்பாமல் வெளியூருக்கு வேலைக்குச் செல்பவர்களே அதிகம் காணப்பட்டனர். மாலை வேளையில் இருட்டுவதற்கு முன்பாக சமைத்து சாப்பிட்டுவிடுகின்றனர். மாலை 6 மணிக்குமேல் வீட்டைவிட்டு யாரும் வெளியே வருவதில்லை. கோயிலில் உள்ள விளக்கு மட்டுமே ஊருக்கு வெளிச்சம். ஒருவர் வீட்டிலும் மின்விளக்கோ, எண்ணெய் விளக்கோ எரிய விடுவதில்லை.
பத்து வருட காலங்களுக்குமேல் இதுவே இவ்வூரின் அன்றாட வாழ்க்கையாக மாறிவிட்டது. இந்த ஊரை வெறுத்து வெளியேற்யவர்கள் அநேகம் பேர். 100 குடும்பங்கள் வாழ்ந்த ஊரில் இப்போது வசிப்பது 20, 25 குடும்பங்கள்தான். அதுவும் இந்த ஊரைவிட்டு போக விரும்பாத கிழடுகட்டைகளும், அவர்களோடு இருக்கவேண்டிய சூழ்நிலையில் இருக்கும் அவர்களுடைய பிள்ளைகளும்தான். இதுதான் பத்துவருட காலமாக இங்கு நடந்துவருகிறது.
பேருந்து செஞ்சியைத் தொட்டிருந்தது. நால்வரும் தூக்கத்திலிருந்து எழுந்து வெளியில் பார்த்தனர். மக்கள் கூட்டம் அலைமோதும் பேருந்து நிலையம். தத்தம் பைகளோடு இறங்கினர். கடைசியாக நின்றிருந்த வினய் கண்டக்டரிடம்,
‘ஸார், இங்க போலிஸ் ஸ்டேஷன் எங்க இருக்கு?’
வந்த வழியே போய் ரைட்ல திரும்புனீங்கனா போலிஸ் ஸ்டேஷன் தான்’
v‘தேங்க்ஸ் ஸார்’.
v வினய் மற்ற மூவருக்கும் போலிஸ் ஸ்டேஷன் இருக்கும் இடத்தை பற்றிக் கூறி அழைத்துச் சென்றான். வந்த வழியே சென்றனர். சிறிது தூரத்தில் வலது புறத்தில் திரும்பிய பாதையின் மூலையிலேயே இருந்தது, போலிஸ் ஸ்டேஷன்.