Get Best Only
பாகம் 6
அடுத்த நாள்-
காலை 8 மணி-
வினய் வீடு-
வினய் எழுந்து குளித்துவிட்டு சுனிலுக்கு போன் செய்தான்.
‘சுனில் 9 மணி, ஆபிஸ்ல மீட் பண்றோம், ரத்தனுக்கு சொல்லிடு’
‘சொல்லிட்றேன் வினய்’
போனை கட் செய்து, ரேஷ்மாவுக்கு போன் செய்தான்.
‘ரேஷ்மா, 9 மணி, ஆபிஸ் வந்துடு, திங்க்ஸ் எடுத்துகிட்டு கெளம்புறோம். ஓகே?’
‘ஓகே வினய். Then, நீயே வந்து என்ன பிக்-அப் பண்ணிட்டு போயிட்றியா? ஸ்கூட்டர் வீட்லயே விட்டுட்டு வந்துட்றேன்’
‘சரி, நான் வர்றேன்’. போனை அணைத்தான்.
சுனில் வீடு-
அறக்க பறக்க சாப்பிட்டுவிட்டு ஆபிஸ் கிளம்பினான்.
அம்மாவிடம் ‘போய்டு வர்றேம்மா’ எனக் கூறிவிட்டு கிளம்பினான். பைக் காற்றை கிழித்துக்கொண்டு விரைந்தது.
காலை 8:45 மணி –
அலுவலகம்-
ரத்தன் முன்னமே வந்து மற்றவர்களுக்காக காத்துக்கொண்டிருந்தான். ரத்தனுக்கு Hi சொல்லிவிட்டு அருகில் வந்து அமர்ந்தான் சுனில்.
சுனில்,’எடிட்டர் இன்னும் வரலியா?’
ரத்தன் ,’ ம்ஹூம், இன்னும் வரல, வினய் கெளம்பிட்டானா?’
‘He is on the way’
சிறிதுநேரம் அமைதி நிலவியது.
ரத்தன்,’சுனில் ப்ரொஜக்ட் பத்தி எனக்கு எதுவுமே சொல்லலியே!’
‘எனக்கே பாதிதான் சொன்னாங்க’
‘என்ன சொன்னாங்க?’
‘எதோ ஒரு ஊர்ல போய் அங்க இருக்குற ஜனங்கள பேட்டி எடுக்கணுமாம்’
‘அவ்ளோதானா!’
‘அந்த ஊர்ல பேய் இருக்குதாம்; நைட் ஆனா உன்ன மாதிரி வயிறு வீங்குன ஆளுங்கள தூக்கிட்டு போய்டுதாம்’
‘டேய், என் வயிறுடா, கேக்கறத குடுக்குறேன், குண்டாய்டுது, இதுல என்னடா தப்பு இருக்கு?’
‘ஒரு தப்பும் இல்லப்பா. சரி, marriage அப்போ பொண்ணுக்கு தாலி கட்டணுமே, முடியுமா?
‘டேய்....’
‘வயிறு பெருசா இருக்கே திரும்பி வந்து கட்ட முடியுமானு கேட்டேன்டா’
‘எனக்கே அந்த கவலை இல்ல உனக்கென்ன? நான் silent modeல இருக்கேன். கோவப்படுத்தி vibrate mode க்கு மாத்திடாத’
ரேஷ்மா வீடு-
துணிகள் நிறைந்த பையோடு வீட்டைவிட்டு வெளியில் வந்தாள் ரேஷ்மா. அம்மாவிற்கும், அப்பாவிற்கும் ‘bye’ சொல்லிவிட்டு வினய்யின் பைக்கில் ஏறி அமர்ந்தாள். வினய்யும் ‘bye’ சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான். அலுவலகத்திற்கு வெளியே பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தனர் இருவரும். எடிட்டர் வந்திருக்கவில்லை. சுனிலின் அருகில் அமர்ந்தான் வினய்.
வினய், ’ரொம்ப நேரமாச்சா வந்து?’
சுனில், ’பத்து நிமிஷம் ஆச்சு வந்து’
எடிட்டர் உள்ளே நுழைந்து அவருடைய கேபினுக்குள் சென்று அமர்ந்தார். வினய்யையும், சுனிலையும் உள்ளே அழைத்தார்.
எடிட்டர், ’ நீங்க ரெண்டு பேரும் தேவையான things-அ எடுத்துகிட்டு கெளம்புங்க. டிக்கட்ஸ் இதுல இருக்கு. செஞ்சி வரைக்கும் போயிடலாம். அதுக்கப்புறம் ஆட்டோல போய்டுங்க. அங்க தங்குறதுக்கு இடம் குடுப்பாங்க. ரிடர்ன் டிக்கட்டும் போட்டாச்சி. போய்ட்டு நல்லபடியா வேலைய முடிச்சிட்டு வாங்க. முன்னாடி சொல்ல மறந்துட்டேன். அந்த ஊர்ல எல்லாமே நீங்கதான் பாத்துக்கணும். போலிஸோ அந்த ஊர்க்காரங்களோ உதவிக்கு வரமாட்டாங்க. சொன்னது புரியும்னு நினைக்கிறேன்’
இருவரும் தலையாட்டினர்.
‘ஓகே, all the best’
மூவரும் கைக்குலுக்கிக்கொண்டனர்.