Get Best Only
பாகம் 12
காலை 6 மணி-
ரத்தன், ரேஷ்மா இருவரும் விழித்தெழுந்தனர். கண்களை துடைத்துக்கொண்டு பார்த்தபோது வினய், சுனில் இருவரும் பெட்ஷீட் இல்லாமல் காலருகில் படுத்துக்கிடப்பதைப் பார்த்தனர்.என்ன ஆச்சு என்று அருகில் சென்று பார்த்தனர். இருவரும் மூச்சு பேச்சில்லாமல் கிடந்தனர். இருவருக்கும் பயம் தொற்றிற்று.
எழுப்பிப் பார்த்தனர். எழவில்லை. ரேஷ்மாவுக்கு அழுகையே வந்தது. ரத்தன் சட்டென்று உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வந்து இருவர் முகத்திலும் தெளித்தான். சட்டென்று விழித்தெழுந்தனர். சற்றுநேரம் பிரம்மை பிடித்ததுபோல் சுற்றிலும் பார்த்தனர்.
ரத்தன்,’ டேய், வினய் என்னாச்சுடா? ஏன்டா இப்டி இங்க வந்து படுத்துட்டிருக்கீங்க?’
இருவருக்கும் எதுவும் நினைவில் இல்லை. சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தனர்.
வினய் சுயநினைவிற்கு வந்தவனாய்,’ நேத்து நைட் எதையோ பாத்த மாதிரி இருக்கு. ஆனா என்ன பார்த்தோம்னு ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது. அது எதுனு சுத்தமா ஞாபகத்துக்கு வரலை. ஆனா ஏதோ வினோதமா பார்த்தோம்னு மட்டும் தெரியுது. சுனில் உனக்கு எதாவது நினைவுல இருக்கா? சுனில், சுனில்’
சுனில் இன்னும் சுயநினைவிற்கு வரவில்லை. அவன் பார்த்த நிமிடமே அவன் பின்மண்டையில் ஓங்கி அடித்தாற்போல உணர்ந்திருந்தான். அவனை அப்படியே கொண்டுபோய் படுக்கையில் சாய்த்தனர். மூவரும் சுற்றிலும் உட்கார்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
ரத்தன்,’ இப்போ என்ன பண்றது?’
ரேஷ்மா,’ இவன ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போகணும்’
ரத்தன், ’எனக்கும் அதுதான் சரின்னு படுது; வினய் நீ என்ன சொல்ற?’
வினய்,’ வேணாம். இந்த ஊர்லயே யாரையாவது வரவச்சி பாத்துக்கலாம். இங்கிருந்து டவுனுக்கு கொண்டுபோக முடியாது. Travel facility இல்ல. அத யோசிக்கணும். மொதல்ல இவன் என்ன கண்டிஷன்ல இருக்கான்னு தெரிஞ்சிப்போம். பிறகு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போலாமா வேணாமானு முடிவு பண்ணுவோம்’
இருவரும் சம்மதித்தனர்.
அந்தப் பெரியவரிடம் உதவி நாடினர். அவர் இவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து சுனிலைப் பார்த்தார். இவர்களிடம் திரும்பி,
‘தம்பிகளா, இது பேயடிதான். ஆளு இப்படி விழுந்து கெடக்குறான். இவன உடனே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போங்க. இல்லனா செத்துப்போயிடுவான்’
வினய் குறுக்கிட்டான்.
‘ஏங்க பேயடின்னு சொல்றீங்க. ஹாஸ்பிட்டல் கூட்டிப்போக சொல்றீங்க. பேயடிக்குப் பார்க்கப்படும்னு எந்த M.B.B.S எழுதி வச்சிருக்கான்? இதுக்கு மந்திரிச்சி விட்றதுதான் பண்ணுவாங்க. அந்த மாதிரி ஏதாச்சும் ஏற்பாடு பண்ணி குடுங்க சார்’
‘இதோ பார் தம்பி, இந்த மாதிரி பேயடியெல்லாம் பாக்குறதுக்கு இங்க ஆளு இல்ல. முன்னாடி இருந்தாங்க. இப்ப இல்ல. ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப்போ இல்லனா, இங்கயே வச்சி நீயே வைத்தியம் பாரு. ஆளை விடு’ என்று சொல்லி அவர் நழுவிக்கொண்டார்.
வினய் சுனிலின் அருகில் வந்து உட்கார்ந்தான்.
‘அவன் கெடக்குறான். சுனிலுக்கு ஒண்ணும் ஆகாது.நீங்க யாரும் பயப்பட வேண்டாம். நாங்க ரெண்டு பேரும்தான் அந்தப் பேய பாத்தோம். எனக்கு சரியாயிடுச்சி இல்ல. அதே மாதிரி அவனுக்கும் சரியாயிடும்.
ரேஷ்மாவும், ரத்தனும் வினய்யை கூர்மையாகப் பார்த்தனர்.
ரேஷ்மா,’ என்னது நீ பேயப் பாத்தியா?’
வினய்க்கு சட்டென்று இரவு நடந்த அனைத்தும் ஞாபகத்துக்கு வந்தது. சட்டென திரும்பினான்.
‘ஆமாம், எனக்கு எல்லாமே ஞாபகத்துக்கு வந்திடுச்சி. நைட் ஒரு சத்தம். குதிரை ஓடி வர்ற சத்தம். தூக்கம் கலைஞ்சிடுச்சி. எழுந்திரிச்சி ஜன்னலோரம் வந்து பார்த்தேன். பக்கத்துல சுனில். அந்த சத்தம் நம்ம வீட்ட கிராஸ் பண்ணி போச்சி. ஆனா எந்த உருவமுமே தெரியல. சடால்னு ஒரு சாட்டை அடிச்சா மாதிரி இருந்தது. அவ்ளோதான். நாங்க ரெண்டு பேரும் அப்படியே மயங்கி பின்பக்கம் விழுந்துட்டோம். ஆனா அது பேய் இல்ல. பேய் எங்கயாவது குதிரையில வருமா? குதிரையில சாமிதான் வரும். ஆமாம் அது சாமிதான். நாங்க எதையோ பாக்கக்கூடாதுனு அடிச்சி எங்கள மயக்கம் போட வச்சிடிச்சி. சாமி இருக்குற ஊர்ல பேய் எப்டி இவ்ளோ ஆட்டம் போட முடியும். ஒருவேள நைட் வந்தது பேய்தானா? ஒண்ணுமே புரியலையே’
வினய் மட்டுமல்லாது அனைவரும் குழம்பிப்போய் இருந்தனர்.
சுனில் மெல்ல மெல்ல சுயநினைவிற்கு வந்துகொண்டிருந்தான்.
அனைவரும் பல் தேய்த்துக்கொண்டிருந்தனர். ரேஷ்மா, ரத்தன் இருவரும் மிகவும் குழம்பிப்போய் இருந்தனர்.
வினய்,’ என்னாச்சு ரேஷ்மா?’
ரேஷ்மா அழ ஆர்ம்பித்தாள்.
வினய்யும், ரத்தனும் சமாதானப்படுத்த முயற்சித்தனர்.
ரத்தன்,’ ஏய், என்னாச்சு?’
ரேஷ்மா,’நாங்க எல்லாருமே உன் பேச்ச கேட்டுதான் இங்க வந்திருக்கோம். ஆராய்ச்சி பண்றேன்னு நீ ஏதாவது பண்ணி உனக்கு ஏதாவது ஒண்ணு ஆயிடுச்சினா எங்களால தாங்க முடியாது. ஆராய்ச்சிலாம் எதுவும் வேணாம். வந்த வேலய மட்டும் பாத்துட்டு கெளம்பிடுவோம். இன்னிக்கு காலைல நீங்க ரெண்டு பேரும் மூச்சு பேச்சில்லாம கெடந்தப்போ எனக்கு எப்டி இருந்திச்சி தெரியுமா?’
‘பயப்படாத, இந்த மாதிரி விஷயங்கள ஆராய்ச்சி பண்ணும்போது இப்டி நடக்குறது சகஜம்தான். பயந்தா ஒண்ணுமே நடக்காது. இது நம்ம life matter. நம்ம carrier இங்க இருந்துதான் start ஆகப்போகுது. இத நாம மிஸ் பண்ணவே கூடாது’
ரத்தன்,’ நாம இத எப்படி பண்ணப்போறோம். நமக்கு முன்னாடி வந்தவங்க எல்லாம் என்ன ஆனாங்கனு பாத்த இல்ல. செத்துப்போயிருக்காங்க, இல்ல பைத்தியம் புடிச்சி திரியுறாங்க. அதே கதிதான் நமக்கும் ஆகும்’
‘அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. நான் பாத்துக்குறேன்’
ரத்தன் அமைதியானான்.