Get Best Only
பாகம் 11
வீட்டிற்குள் நுழைந்தனர். ஒட்டனை அடிக்கப்படாமல் இருந்தது. இதற்குமுன் குடும்பம் இருந்ததற்கான அடையாளம் இருந்தது.உறிமரம், தூண் என அனைத்தும் அப்படியே இருந்த்து. ஒரே ஒரு மண்ணெண்ணெய் விளக்கு. பாத்ரூமில் தண்ணீர் இரண்டு வாளியில் இருந்தது. ஆனால் பிடித்து வைத்து ஒரு வாரம் ஆகியிருக்கும் போல இருந்த்து. பெருமூச்சுடன் அனைவரும் அமர்ந்தனர்.
‘என்ன ஊருடா இது. ஒருத்தங்கிட்ட பேசனதுக்கே ஒரு மாசம் தூக்கம் வராத மாதிரி சொல்லிட்டு போறான். ஊர் மொத்தத்தையும் விசாரிச்சா உண்மையிலேயே செத்துருவோம் போலயே’ ரத்தன் புலம்பினான்.
‘ ‘
ம்ஹும், இது சரிவரும்னு தோணல. இத பண்ணனும்னு நமக்கென்ன விதியா? இந்த வேல இல்லனா வேற வேல. We can’t die for job. Right guys?’
No, you wrong. We should. We should die for job. இத முடிச்சா நம்ம ரேஞ்ச் மாறிடும். பெரிய அளவுல பேசப்படுவோம். And one more thing. நாம இங்க பேட்டி எடுக்க மட்டும் வரல. நாமலாம் journalist. நாம இத அந்த Angle ல யோசிச்சா என்ன? பேட்டி ஆபிஸுக்காக, journalism நமக்காக. நமக்கு என்ன தேவையோ அத Day 1 ல இருந்து தேடுவோம். We should find out what the shit is going on here.
நள்ளிரவு 11:50 மணி-
வினய் அரைதூக்கத்தில் இருந்தான். காட்டின் ஓரத்தில் நரிகளின் ஊளைச்சத்தம். பறவைகளின் சிணுங்கல்கள். ஒரு நிமிடம் மயான அமைதி. வினய்யின் தூக்கம் கலைந்தது.
“என்ன அமைதி”
எழுந்து அமர்ந்தான். அப்போதுதான் அந்த சத்தம் கேட்டது. குதிரையின் சத்தம். தூரத்திலிருந்து ஓடிவரும் சத்தம். காற்றில் லேசாக வந்துகொண்டிருந்தது. மறுபடி அமைதி. சில நொடி கழித்து மறுபடி குதிரையின் சத்தம். இவ்வாறாக அந்த சத்தம். மெல்ல மெல்ல நெருங்கிவந்து கொண்டிருந்தது. வினய் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டிருந்தான். அருகில் ஒரு உருவம். பக்கென தூக்கிவாரிப் போட்டது. அது சுனில்.
‘டேய்’
சாரிடா, உனக்கும் அந்த சத்தம் கேட்குதா?’
‘ஆமா’
குதிரைச்சத்தம் நெருங்கி வந்து இவர்கள் இருந்த வீட்டைத் தாண்டிச் சென்றது போலிருந்தது. ஆனால் உருவம் ஏதும் தெரியவில்லை. குதிரை நின்ற சத்தம். திரும்பி வந்துகொண்டிருப்பது போலிருந்தது. இவர்கள் இருந்த வீட்டின்முன் வந்து நின்றது தெரிந்தது. சடாலென்று ஒரு வெள்ளைச்சாட்டியின் மிளிரல் இவர்கள் கண்முன் வந்து அடித்தது. அப்படியே இவர்களை பின்னோக்கி தள்ளியது. அப்படியே மயங்கி பின்புறம் விழுந்தனர்.