Get Best Only
பாகம் 5
போனில்-
‘சுனில், ப்ரொஜக்ட் நல்ல ப்ரொஜெக்ட். செஞ்சி-னு ஒரு ஊரு அதுக்குப் பக்கத்துல இருக்குற ஒரு கிராமம். அங்க நைட் ஆனா பேய் நடமாட்றதா சொல்றாங்க; நாம அங்க போய் ஊர் மக்கள் எல்லாரையும் பேட்டி எடுக்கணும். ரெண்டு நாள் அங்கயே தங்கணும்; உனக்கு ஒகே வா?’
‘யார் யார் போகப்போறோம்?’
‘நம்ம டீம்தான்; வேற யாருமில்லை; ஆனா ரத்தனுக்கோ, ரேஷ்மாவுக்கோ இன்னும் சொல்லல. உனக்கு ஒகேனா எனக்கு ஓகே. என்ன சொல்ற?’
‘ஓகே, எனக்கு ஓகே’
‘சரி, நான் ரேஷ்மாவுக்கு சொல்லிட்றேன். ரத்தனுக்கு நீ சொல்லிட்டேன்னா, எனக்கு போன் பண்ணு. நான் இப்போ ரேஷ்மாவுக்கு கால் பண்றேன்’
‘ஓகே’
சுனிலின் அழைப்பைத் துண்டித்து விட்டு ரேஷ்மாவுக்கு போன் செய்தான் வினய். அவளிடம் விஷயத்தைக் கூற அவள் சரியென சம்மதித்தாள். வினய் போனை கட் செய்தான். மறுநிமிடம் சுனிலிடம் இருந்து அழைப்பு வந்தது. ரத்தன் சம்மதித்துவிட்டதாகவும் கூறினான். சுனிலின் லைனை கட் செய்த வினய் எடிட்டருக்கு போன் செய்தான்.
‘சொல்லு வினய்’
‘எங்க டீம் மெம்பர்ஸ்க்கு சொல்லிட்டேன். நாங்க ரெடி. நாளைக்கே போறதா இருந்தாலும் எங்களுக்கு ஓகே’
‘வினய் இன்னொரு முக்கியமான விஷயம். அந்த ஊருக்கு வண்டி போறது கஷ்டம். போலீஸ் help-ம் கெடைக்காது. எதாவது ப்ராப்ளம்னா நீங்களேதான் பாத்துக்கணும்.’
‘ஓகே ஸார்.’
‘இங்கிருந்து 4 மணிநேரம் பயணம், செஞ்சி வந்திடும். அங்கிருந்து பரதன் தாங்கல் வந்திடும். ஊர்ல போய் எறங்கிட்டா அங்க இருக்குறவங்களே உங்கள பாத்துக்குவாங்க. நான் உங்க கிட்ட சொன்ன வேலையையும், அவங்க உங்களுக்கு சொல்லப்போற condition-க்கும் நீங்க ஒத்துழைக்கணும்’
‘சரி ஸார்’
‘செஞ்சிக்கு normal-ஆ கோயம்பேட்ல இருந்தே பஸ் போகுது. உங்களுக்கு தேவையானது எல்லாத்தையும் நாளைக்கு வந்து எடுத்துக்கிட்டு நீங்க கெளம்பலாம் வினய்.’
‘ஓகே ஸார்’.
‘ரேஷ்மா கிட்ட கேட்டியா?’
‘அவங்களும் வர்றதா சொல்லிட்டாங்க ஸார்’
‘OK, Fine, See you tomorrow’
‘ஓகே ஸார்’
அழைப்புத் துண்டிக்கப்பட்டது.
சுனிலுக்கு போன் செய்து எடிட்டர் கூறிய விஷயங்களை சொன்னான். சுனிலோ, ’ஒகே வினய், பாத்துக்கலாம்’ எனக் கூறினான்.
வினய் போனை அணைத்துவிட்டு யோசிக்கலானான். நாளை நடக்கவிருப்பது அம்மாவிற்கு எந்த வகையிலும் தெரிந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.