Get Best Only
பாகம் 3
தோராயமாக பத்து வருடங்களுக்கு பிறகு-
சென்னை மாநகரம்-
மாணிக்கமும் அவனது தாயாரும் தஞ்சம் புகுந்த ஊர். பணம் பேசும் ஊர். இவ்வூரின் ஒரு மூலையில் வந்து இறங்கியபோதே தன் மகனை நல்ல ஒரு படிப்பாளி ஆக்க வேண்டும் என்ற கனவோடே முதற்காலடி எடுத்து வைத்தாள். கஷ்டப்பட்டு B.A. Journalism படிக்க வைத்தாள். இப்போது மாணிக்கம் மன்னிக்கவும், இப்போது அவனது பெயர் வினய். பிறந்த ஊரின் அடையாளம் மறைய வேண்டும் என்பதாலும், மறக்க வேண்டும் என்பதாலும் இந்த முடிவு. வினய் படித்து முடித்து தின ஏடு பத்திரிக்கையில் வேலை பார்த்து வருகிறான். இரண்டு நிறுவனங்கள் மாறி இப்போது இங்கு சேர்ந்திருக்கிறான். நல்ல நிறுவனம், நல்ல சம்பளம். சேர்ந்து ஒரு மாதமே ஆன போதிலும் நல்ல நட்பு வட்டாரம் அமைந்து விட்டது.
சுனில், ரத்தன் மற்றும் ரேஷ்மா இவனது நெருங்கிய நண்பர்கள். முதல் மாத சம்பளம் வாங்கும் நாள்.
சுனில்,’ வினய், இன்னிக்கு உன்னோட ட்ரீட் தான். ஏமாத்திடாத’
வினய்,’ என்ன ட்ரீட்?’
‘ஃபர்ஸ்ட் மந்த் சேலரி வாங்கிட்டல்ல. நீ ட்ரீட் குடுக்கணும்’ அதான் ரூல்ஸ்’
‘சரி குடுக்குறேன். யார், யார்க்கு?’
சுனில், ரத்தன், ரேஷ்மா மூவருக்கும் என கையுயர்த்தினர்.
வினய்யோ “நல்ல வேல மூணு பேர மட்டும் ஃப்ரெண்டா வச்சிக்கிட்டோம்” என எண்ணிக்கொண்டான்.
வினய், ’எப்போ குடுக்கணும்?’
ரேஷ்மா,’ நல்லத எப்ப வேணாலும் செய்யலாம். இன்னிக்கு ஈவ்னிங்’.
மாலை 5 மணி-
நால்வரும் அருகிலிருந்த ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றனர். ரத்தன் chicken fry வாங்கிக்கொள்ள, ரேஷ்மா ஒரு faluda வாங்கிக் கொண்டாள். சுனிலும், வினய்யும் soup, veg snacks வாங்கிக்கொண்டனர். அனைவரும் தத்தம் உனவுகளை சாப்பிட்டு முடித்தனர். அதற்குள் வினய்யின் ஃபோன் அழைத்தது. எடுத்துப்பார்த்தான். ஆஃபிஸிலிருந்து எடிட்டர் அழைப்பு. எடுத்துப் பேசினான்.
எடிட்டர்,’ வினய்?’
‘சொல்லுங்க ஸார்’
‘எங்க இருக்க வினய்?’
‘ஃப்ரெண்ட்ஸ் கூட வெளிய இருக்கேன் ஸார்’
‘இப்போ ஆஃபிஸ் வரமுடியுமா?’
‘எதாச்சும் சீரியஸ் மேட்டரா ஸார்?’
‘கொஞ்சம் சீரியஸான மேட்டர் தான்’
‘உடனே கிளம்பி வர்றேன் ஸார்’
வினய்,’ சுனில், எடிட்டர் ஆபிஸ்க்கு கூப்புட்றார். நான் போறேன்’
‘பில்லு மட்டும் pay பண்ணிட்டு போயிட்ரா’
ஆஃபீஸ்-
எடிட்டர் வினய்க்காக காத்திருந்தார். வினய் பைக்கை பார்க்கிங்கில் விட்டுவிட்டு எடிட்டர் ரூமுக்குள் நுழைந்தான்.
வினய்,’ may I come in sir?’ எனக் கேட்டு உள்ளே வந்தான்.
எடிட்டர்,’ வந்து உட்காரு வினய்’
எதிரிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான் வினய்.
எடிட்டர் தொடர்ந்தார்.
‘வினய் நம்மளோட முன்னாடியும், பின்னாடியும் நெறய பத்திரிக்கைகள் வந்திருக்கு. ஆனா நம்மளால நம்மளோட இடத்த தக்க வச்சிக்க முடிஞ்சதே தவிர, அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக முடியல. ஸோ, நான், சேர்மன், சில சீனியர் ஸ்டாஃப்ஸ் எல்லாரும் கூடிப் பேசி ஒரு முடிவு எடுத்திருக்கேன். சென்ஸிட்டிவ்வான விஷயங்களுக்கு எப்பவுமே சீசன் டைம் தான். அது அள்ள, அள்ள குறையாத அட்சய பாத்திரம் மாதிரி. ஒண்ணு மாறி, ஒண்ணு வந்துகிட்டே இருக்கும். சீனியர்ஸுக்கு ரிஸ்க் அதிகமா இருக்குற இடங்களுக்கு அனுப்பலாம்னு இருக்கோம். உங்க ஃப்ரண்ட்ஸ் குரூப்ல ரேஷ்மாவைத் தவிர்த்து நீங்க மூணு பேர் போறதுக்கான ப்ராஜக்ட் ரெடி பண்ணி இருக்கோம். Actually, இத நான் சுனிலைக் கூப்பிட்டு சொல்லி இருக்கணும். பட், உங்க கிட்ட இதப் பத்திப் பேசணும்னு தோணிச்சி’
‘என்ன ப்ராஜெக்ட்னு சொல்லுங்க சார்’
‘உங்களுக்கு செஞ்சிக் கோட்டை தெரியுமா?’
‘தெரியும் சார்’
சொல்லி முடித்தவுடன் தான் அவனுக்கு ஞாபகம் வந்தது, அது அவன் பிறந்த ஊருக்கு அருகில் இருக்கும் ஊர் என்பது.
No comments:
Post a Comment