அடர்ந்த காடு. நிலவெளிச்சமோ, சூரிய வெளிச்சமோ சிறிதளவும் உட்புக முடியாது.பகலிளும், இரவிளும் யாரும் உட்செல்வதில்லை. ஆட்கொல்லி மிருகங்கள் ஏதும் இல்லையெனினும், உட்சென்றால் திரும்பி வழி தெரிந்து வருவது கடினம். பகலிலே விறகிற்கும், இரவிலே மிருக வேட்டைக்கும் செல்வது வழக்கம். அதிக தூரம் செல்வதில்லை.
வயலில் வேலை இல்லாத நாட்களில் ஆண்கள் இரவில் காட்டுக்குள் வேட்டைக்குச் செல்வது வழக்கம். அன்றிரவும் வழக்கம்போல் வேட்டைக்குச் செல்ல ஆயத்தமாயினர் இருவர். கதைப்படி ஒருவர் பின்னாளில் இக்கதையின் கதாநாயகன் ஆகப்போகும் மாணிக்கத்தின் அப்பா மாயாகுரி. ஊரிலிருந்து ஆற்றுக்குச் செல்லும் வழியே சென்று வேட்டையாடுவதே வழக்கம்.அன்றிரவும் அதேபோல் கதைகளை பேசியவாறு இருவரும். ஆற்றுப்பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். எதிரே ஒரு வெளிச்சம். ஒரு உருவம். கையில் பந்தம் போன்று ஒன்றை பிடித்துக்கொண்டு நின்றது. மாயாகுரியோ யார் என்று கேட்க எத்தனித்த அடுத்த வினாடி, பின்னே இருந்து அவரது தலையை திருகிப் போட்டது ஒரு உருவம். உடன் இருந்தவன் அலறி அடித்து ஊர் பக்கம் ஓடியவன்சற்று திரும்பிப் பார்த்தான்.மொத்தமாக மூன்று உருவங்கள் நின்று கொண்டிருந்தது.
அவனோ உயிர் பிழைத்தால் போதும் என்கிற வாக்கில் ஓடிக்கொண்டிருந்தான். ஓடிச்சென்று ஊரில் உள்ளவர்களிடம் நடந்தவற்றைக் கூறினான். அவர்களோ அஞ்சி நடுங்கினர். இரவு வேளையில் காட்டிற்குள் செல்ல பயந்தனர். மாணிக்கத்தின் அம்மாவும், மாணிக்கமும் அனைவரிடத்திலும் கெஞ்சினர். அழுதனர். மன்றாடினர். ஆனால் ஒருவரும் காட்டிற்குள் சென்று பிணத்தை கொண்டுவர எத்தனிக்கவில்லை. பொழுதும் விடிந்தது. பிறகு நான்கு பேர் காட்டிற்குள் சென்றனர். இரவு பயந்து ஓடிய அவரும் உடன் சென்றார். ஆனால் பிணம் தென்படவில்லை. கொஞ்சம் முன்சென்றும் பார்த்தனர். ஆனால் பல மணி நேரம் தேடியும் பலனில்லை. வெறும் கையோடு ஊர் திரும்பினர். மாணிக்கமும், அவன் தாயாரும் செய்வதறியாது அழுதுகொண்டிருந்தனர். பிணம் கூட இல்லாமல் சாவுக்கு செய்ய வேண்டிய வேலைகளை செய்ய முடியாமல் போயிற்று. இதை எண்ணியபடியே நாளும் முடிந்தது. மாலையாயிற்று. வழக்கம்போல் அல்லாமல் ஊர் மொத்தமும் நிசப்தம்.
இரவு 11 மணி..
சிலர் மட்டும் வீட்டிற்கு வெளியே அமர்ந்துகொண்டும், தூங்கிக்கொண்டும் இருந்தனர். ஊர் முழுவதும் இருள் போர்த்தியிருந்தது. அப்போது ஊரிலிருந்து காட்டுக்குச் செல்லும் ஆற்று வழியில் திடீரென ஒரு வெளிச்சம். அமர்ந்திருந்த சில. ஆண்கள் வெளிச்சம் வந்த இடத்தைப் பார்த்தனர். அங்கே ஒரு உருவம் கையில் பந்தம் போன்று ஒன்றை வைத்துக் கொண்டு நின்றிருந்தது. அந்த பந்தமோ வித்தியாசமாக நீல நிறத்தில் எரிந்து கொண்டிருந்தது. அது யார்? என்ன? என்பதை தெரிந்துகொள்ள வேண்டி அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சட்டென வெளிச்சம் மறைந்தது. அந்த உருவமும் கண்ணில் படவில்லை. அடுத்த நொடி உருவம் நின்றிருந்த இடத்தில் இருந்து இடப் பக்கம், சற்றுத் தொலைவில் மறுபடி அந்த உருவம் எரியும் பந்தத்துடன் நின்றிருந்தது. மறுபடி மறைந்தது. ஊர் மக்களில் பலர் அங்கு வந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சில நொடிகள் கழித்து அந்த உருவமும் இவர்களுக்கு முன்னே இருந்த ஒரு வயலின் வரப்பில் தோன்றியது. தலையை கவிழ்த்திருந்த அந்த உருவம் தலையைத் தூக்கியது. ஒரு நிமிடம் அனைவரது நெஞ்சமும் உறைந்து போனது. அந்த உருவத்தின் கையில் இருந்த பந்தம் மட்டும் அல்லாது, அதன் முகமும் எரிந்து கொண்டிருந்தது.அதைப் பார்த்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு தத்தம் வீட்டிற்குள் சென்று தாழிட்டுப் படுத்துக்கொண்டனர்.காலை வரை ஒருவரும் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை.
குறிப்பு: கீழே இருக்கும் மஞ்சள் நிற அம்புக்குறியை பயன்படுத்தி அடுத்தடுத்த பாகங்களை படிக்கவும். mobile versionல் படிப்பது சிறந்த தேர்வு.

This comment has been removed by a blog administrator.
ReplyDelete